பருவமழையால் 6 மாதங்களுக்கு பின்னர் மூல வைகையில் நீர்வரத்து அதிகரிப்பு

Madurai Vaigai River- மேகமலையில் பெய்யும் மழையால் 6 மாதங்களுக்கு பின்னர் மூல வைகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-08-08 03:21 GMT

மேகமலையில் பெய்து வரும் மழையால் மூல வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது.

Madurai Vaigai River- தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை (தற்போதைய சீசன்) காலங்களில் மழையளவு குறைவாகவே இருக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை வெளுத்துக்கட்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் சுமாராக பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று அதிகம் தான்.

மேகமலை வனப்பகுதியில் பெய்து வந்த மழையால் மேகமலையில் உள்ள மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உட்பட ஐந்து அணைகளும் நிறைந்து விட்டன. சுருளி அருவியிலும், சின்னசுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மூல வைகை ஆற்றில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் தற்போது தான் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் ஜனவரி கடைசி வரை தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது. பிப்ரவரியில் மூலவைகையே வறண்டது. இப்போது மூல வைகையிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதனால் வைகை அணைக்கான நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைகை அணை நிரம்பி உள்ளதால் வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே மழை தொடர்ந்தால், வைகை ஆற்றின் கடைமடை பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News