உளுந்து, பாசிப்பயறு விதைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல்

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2022-01-10 03:28 GMT

உளுந்து சாகுபடி ( பைல் படம்)

தேனி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயத்துறை 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறது.இது குறித்து தேனி விவசாயத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெல் தரிசு நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு விதைப்பதன் மூலம் அந்த நிலத்தில் நைட்ரஜன் செறிவூட்டல் அதிகளவு நடைபெறும். இதற்காக உளுந்து, பாசிப்பயறு விதைகதை விதைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த, 50 சதவீத மானியத்தில் விவசாயத்துறை வழங்குகிறது.

தேவைப்படும் விவசாயிகள தங்கள் பகுதியில் உள்ள விவசாய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News