முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 400 கனஅடி நீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் முதல் போக நெல் சாகுபடி செய்ய கடந்த ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இது படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் விநாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணை நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்து 61.58 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 669 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.