தேனி மாவட்ட விபத்துகளில் 4 வயது சிறுவன் உள்ளிட்டட மூன்று பேர் சாவு
தேனி மாவட்டத்தில் நடந்த விபத்துக்களில் நான்கு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.;
தேனி மாவட்டம், எ.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 29. இவர் தனது மகன் ராஜபாண்டி, 4 மற்றும் உறவினர் பழனியம்மாளுடன், 43 தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்க்க டூ வீலரில் வந்தார். வத்தலக்குண்டு ரோட்டில் பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி, 29, அவரது மகன் ராஜபாண்டி, 4 சம்பவ இடத்திலேயே இறந்தனர். பழனிம்மாள் பலத்த காயமடைந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் கலமச்சேரி களரிக்கன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அருண், 27. இவர் தனது மனைவியுடன் டூ வீலரில் தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார். போடி மெட்டு மணப்பட்டி அருகே டூ வீலர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த அருண் இறந்தார். குரங்கனி போலீசார் விசாரிக்கின்றனர்.