தேனி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2022-06-18 03:14 GMT

பைல் படம்.

திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த போதுராஜன் என்பவர் மகன் கவின், 17. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் தன் நண்பர் உதயக்குமாருடன், 19 டூ வீலரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார்.

காமக்காபட்டி செக்போஸ்ட் அருகே நின்றிருந்த சிவப்பு கலர் காரின் கதவு திடீரென திறக்கப்பட்டது. இதில் டூ வீலர் மோதியதால் இருவரும் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். கவின் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். உதயக்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் பாரஸ்ட்ரோட்டில் வசித்த ஒர்க்‌ஷாப் தொழிலாளி தம்பீஸ்வரன், 30. இவர் கூடலுாரில் வேலைக்கு சென்று விட்டு டூ வீலரில் கம்பம் திரும்பிக் கொண்டிருந்தார். கம்பம் ரோட்டோரம் தனியார் கல்லுாரி அருகே வந்தபோது நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கம்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம், மாட்டுக்கொட்டா அய்யப்பன்கோயில் மஞ்சரபெலில் வீட்டை சேர்ந்தவர் ஜோமன் என்ற ஜோஸ்பர், 43. இவர் தனது நண்பர்கள் ரெஞ்சிஸ்மோன், புனோயி ஆகியோருடன் பலாப்பழம் விற்க தேனி வந்தார். ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் அருகே உடலில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார். வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் தென்கரை சின்னம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 76. இவர் வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து பின் தலையில் பலத்த காயடைந்து இறந்தார். தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News