தேனி, கூடலுாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
தேனி, கூடலுாரில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கூடலுார் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் கருனாக்கமுத்தன்பட்டி- குள்ளப்பகவுண்டன்பட்டி விலக்கில் நின்று சோதனை செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக டூ வீலரில் கஞ்சா கடத்தி வந்த நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 22, சிவனேந்திரன், 25 ஆகியோரை கைது செய்தார்.
இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் கருனாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த தெய்வம், 55 என்பவரையும் கைது செய்தார். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தேனி பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., அசோக் கோடாங்கிபட்டியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றி சிலம்பரசன், 33 என்பவரை கைது செய்தார். தப்பி ஓடிய பிரதீப் என்பவரை தேடி வருகிறார்.