தேனி மாவட்டத்தில் ஓராண்டில் 3119 பேரின் ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து
Violation of Traffic Rules - தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வாகனம் ஓட்டியதில் விதிமீறலில் ஈடுபட்ட 3119 பேரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டது
தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி வாகனம் ஓட்டுதல், அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், இதர போக்குவரத்து விதிகளை மீறுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்ட 3119 பேரின் லைசென்ஸ்களை போலீஸ் நிர்வாகம் ரத்து செய்ய பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் இவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2