தேனி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2022-04-25 03:33 GMT

பைல் படம்.

போடி புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமர், 50. இவர் போடியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ரோட்டோரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்போது மாட்டு வண்டி பந்தயத்தில் ஓடி வந்த மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த ராமர் இறந்தார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாரத்ராகுல், 15. இவரும் இவரது நண்பர்கள் ஹரி, கார்த்தி, நவீன் ஆகியோரும் கோயில் திருவிழாவிற்காக வைத்திருந்த பிளக்ஸ்ஸை எடுத்து வந்தனர். அப்போது பிளக்ஸ் மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து பாரத்ராகுல் இறந்தார். மற்ற மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் வெள்ள பொம்மன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர் பண்ணைக்காடு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பண்ணைக்காட்டிற்கு பணிக்கு சென்று விட்டு டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டம்டம்பாறை அருகே பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பலியானார்.

Tags:    

Similar News