தேனியில் கடந்த ஆண்டு விபத்தில் 264 பேர் பலி: டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள் அதிகம்..!
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர், இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள்.
தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 167 கி.மீ., மாநில சாலைகள் 230 கி.மீ., மாவட்ட சாலைகள் 222 கி.மீ., இதர சாலைகள் 490 கி.மீ., ஆக மொத்தம் 1109 கி.மீ., சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் கடந்த 2021ம் ஆண்டு 967 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள் தான், இதனால்தான் தலைகவசம் மிகவும் அவசியமாகிறது. கடந்த ஆண்டு அதிக விபத்துகள், அதிக உயிரிழப்புகள் நடந்த மாவட்டங்களின் பட்டியலில் தேனியும் இடம் பெற்றுள்ளது என்பது வருத்தமான செய்தி.