தேனி மாவட்டத்தில் 515 கவுன்சிலர் பதவிக்கு 2352 பேர் வேட்பு மனு தாக்கல்
தேனி மாவட்டத்தில் 515 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 2352 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.;
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் உள்ள 177 வார்டு கவுன்சிலர்களுக்கும், 22 பேரூராட்சிகளில் உள்ள 338 கவுன்சிலர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
நகராட்சிகளில் 966 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகளில் 1386 பேர் போட்டியிட மனு செய்துள்ளனர். ஆக மொத்தம் 2352 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கிறது.