திருமங்கலம் அருகே ப.அம்மாபட்டி சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..!
திருமங்கலம் அருகே ப.அம்மாபட்டி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருமங்கலம் அருகேயுள்ள ப.அம்மாபட்டி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த, பதினெட்டு சமுதாய மக்கள் வழிபடும் சென்றாயப் பெருமாள் கோவில்,இயற்கை இடர்,மற்றும் பழமை காரணமாக சிதிலமடைந்து பழுதாகி இருந்தது...
எனவே , கிராம மக்கள் ஒன்றுகூடி இக்கோயிலை இடித்து அதே இடத்தில் புதியதாக கோவில் கட்ட முடிவு செய்தனர். கிராமத்தில்,உள்ள சுமார் 600 குடும்பங்கள் ஒன்றினைந்து குடும்பத்திற்கு ரூ. 2000 வரி வசூல் செய்தும், நல் உள்ளம் படைத்த அன்பர்களின் நன்கொடை காரணமாகவும் சுமார் 18 இலட்சம் மதிப்பில் 36 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய கோவிலை கட்டி முடித்தனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள, பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று மண்டல பூஜைகள்,புரோகிதர்கள் மந்திரம் ஓத சிறப்பாக நேற்று நடைபெற்றது..கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்தவுடன் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அம்மாபட்டி, வலையப்பட்டி,பன்னீர் குண்டு, தங்களாச்சேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுபுற பக்தர்கள் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் கமிட்டி சார்பில் செய்திருந்தனர். பக்தர்களை கட்டுப்படுத்த கோவில் சார்பில் குழு அமைக்கப்பட்டு அவர்களை முறையாக வழி நடத்தினர். காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.