குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்
மதுகுடிக்க பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை 16 வயது சிறுவன் கொலை செய்தார்.;
ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் வசந்த், 18. தாய், தந்தையரை இழந்த வசந்த் தனது 16 வயது தம்பியுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இருவருமே குடிக்கு அடிமையானவர்கள். வேலைக்கும் செல்வதில்லை. இந்நிலையில் இவரது வசந்தின் தம்பி தனது பாட்டியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை வசந்த் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனது அண்ணன் துாங்கும் போது, அவரது தலையில் அம்மிக்கல்லை துாக்கிப் போட்டார். அரிவாள் மனையால் கை, கால்களை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வசந்த் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.