தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை எழுதும் 14,893 மாணவர்கள்

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை 14 ஆயிரத்து 893 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.;

Update: 2022-05-04 03:06 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வு வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. 142 பள்ளிகளை சேர்ந்த 7433 மாணவர்கள், 7460 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 893 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 53 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தவிர 601 தனித்தேர்வர்கள் 3 மையங்களில் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வு மே 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.142 பள்ளிகளை சேர்ந்த 8033 மாணவர்கள், 7498 மாணவிகள் உட்பட மொத்தம் 15531 பேர் எழுதுகின்றனர். இவர்களும் 53 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. 202 பள்ளிகளை சேர்ந்த 8412 மாணவர்கள், 7549 மாணவிகள் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 961 மாணவ, மாணவிகள் 66 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுப்பணியில் 3500 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இத்தேர்வுகளை கண்காணிக்க 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News