எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ரூ.1.25 கோடி ஊழல்

தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பயன்படுத்த எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

Update: 2022-06-15 10:45 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் எல்.இ.டி., பல்புகள் வாங்க முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்கள் பல்பு வாங்கியதில் 1.25 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி இந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மீதும், பேரூராட்சிகளில் பணிபுரியும் 11 நிர்வாக அலுவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News