ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பில் 110க்கும் மேல் கைது: அமைதியானது தேனி
தேனி கலெக்டரும், எஸ்.பி.,யும் தாங்கள் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்குள் 110க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.;
தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., டோங்கரே பிரவீன்உமேஷ். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஒரே சமயத்தில் தேனியில் பொறுப்பேற்றனர். ஓராண்டு ஆகிய நிலையில் இதுவரை இவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 110ஐ கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள், பல கொள்ளை, கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேனி மாவட்டம் பிரிந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என பொதுமக்கள் தேனி எஸ்.பி.,யையும், கலெக்டரையும் பாராட்டி வருகின்றனர்.