உளுந்து தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு
போடியில் உளுந்து தோட்டத்தில் 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்திற்குள் விட்டனர்.
போடியில் உளுந்து தோட்டத்திற்குள் இருந்து 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
போடி- மூணாறு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் கல்லுாரிக்கு எதிரே உள்ள சக்திவேல் என்பவரது தோட்டத்தில் 20 விவசாயிகள் உளுந்து அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு கிடந்ததை கண்டனர். தீயணைப்புத்துறைக்கு தகவல் தரப்பட்டது. போடி தீயணைப்புத்துறையினர் வந்து மலைப்பாம்பினை பிடித்து வனத்திற்குள் கொண்டு சென்று விட்டனர்.
போடியில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் நல்லபாம்பு, மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் ரோட்டில் ஹாயாக உலா வந்த 11 அடி நீளம் உள்ள நல்லபாம்பு சிக்கியது குறிப்பிடத்தக்கது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பாம்புகள் இப்பகுதியில் அதிகம் உள்ளன. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.