தோட்டத்தில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி

புல் அறுக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி அபிதா பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-03 06:00 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், கண்டமனுார் பிஸ்மிநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 39. இவரது மகள் அபிதா, 15. பத்தாம் வகுப்பு படித்து வந்த அபிதா தனது பாட்டியுடன் சேர்ந்து புல் அறுக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News