தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 1004 மனுதாக்கல்
தேனி மாவட்ட நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் நேற்று ஒரே நாளில் 1004 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் 177 வார்டுகளுக்கும், 22 பேரூராட்சிகளில் 335 வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
நகராட்சி வார்டுகளுக்கு 80 பேரும், பேரூராட்சி வார்டுகளுக்கு 301 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைவதால் நேற்று வேட்புமனு தாக்கலில் விறுவிறுப்பு காணப்பட்டது.
ஆறு நகராட்சிகளிலும் இன்று 391 பேர் மனுதாக்கல் செய்தனர். 22 பேரூராட்சிகளில் 613 பேர் மனுதாக்கல் செய்தனர். ஆக ஒரே நாளில் 1004 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 513 நகர்ப்புற உள்ளாட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இதுவரை 1305 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.