வைகாசியில் 100 ரூபாய், ஆனியில் 20 ரூபாய்: தக்காளி விலை பரிதாபமாக சரிவு

Tomato Market Rate Today -கடந்த மாதம் கிலோ 100 ரூபாயினை எட்டிய தக்காளி இந்த மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விழுந்தது.;

Update: 2022-06-18 04:30 GMT

பைல் படம்.

Tomato Market Rate Today - தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கிலோ 150 ரூபாய் வரை ஏறி பின்னர் இறங்கியது. இந்த ஆண்டு கடந்த சித்திரை, வைகாசி மாதங்களில் கிலோ 100 ரூபாயினை எட்டியது. பின்னர் படிப்படியாக சரிந்து வந்தது. இன்று கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகம் இருந்தது. வைகாசி மாதம் கோயில் விழாக்களுடன், திருமண முகூர்த்தங்கள் மிக, மிக அதிகம் இருந்தன. இதனால் தேவை அதிகரித்து தக்காளி விலை கிலோ 100 ரூபாயினை எட்டியது. அதேசமயம் வெளிமாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்தது. உள்ளூர் விளைச்சலும் அதிகரித்தது. அதேசமயம் ஆனி மாதம் பிறந்து விட்டதால் விசேச நிகழ்ச்சிகள் குறைந்து விட்டன.

வெகு சிலர் மட்டுமே விசேஷம் நடத்துகின்றனர். கோயி்ல் விழாக்களும் நிறைவுக்கு வந்து பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு விட்டன. திருவிழாக்காலம் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதால் தேவையும் குறைந்தது. இதனால் விலை சர்ரென இறங்கி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி மட்டுமல்ல. அத்தனை காய்கறிகளின் விலைகளும் சரிவில் தான் உள்ளன என்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News