சந்திரனில் கால் வைத்ததால் இந்தியாவிற்கு என்ன லாபம்?
நிலவின் மேற்பரப்பில் கொட்டிக் கிடக்கும் ஹீலியம் 3 என்ற தனிமத்தை இந்தியா நினைத்தால் சுலபமாக அள்ள முடியும்
சந்திரனின் நிலப் பரப்பில் , அரிய வகை தனிமங்கள் , பூமியை விட அதிகம் இருப்பதை 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு தெரிந்து கொண்டதும், அனைத்து நாடுகளுக்கும் நிலா மீது இரண்டாவது காதல் பிறந்தது. ஹீலியம் 3 என்னும் RAREST ELEMENT, சந்திரனில் நிறைய இருக்கிறது. உலகளவில் அதன் விலை $ 1400/ கிராம். ஐயா தங்கத்தின் விலை $66.29 /கிராம் என்பதை மனதில் கொள்வோம்.
இந்த helium 3 யின் நன்மை என்ன ? இந்த HELIUM 3 பாதுகாப்பான அணு சக்தி உற்பத்திக்கு உதவுகிறது. அதில் மனித குலத்தை பாதிக்கும் ரேடியோ ஆக்டிவ் இல்லவே இல்லை. இதன் மூலம் வரும் கழிவுகள் பாதுகாப்பானவை. இந்தியாவுக்கு ஒரு டன் போதும். உலகளவில் 25 டன் helium 3 தேவைப்படுகிறது.
பூமியில் கிடைக்குமா கிடைக்காதா ? கிடைக்கும். கடல் நீரில் உண்டு ! எடுப்பது தான் சிரமம். சமீபத்தில் ரஷ்யா அனுப்பிய லூனார் நிலா மீது மோதியது. இந்தியா மட்டும் எப்படி சாதித்தது ? சந்திராயன் 2 வில் கிடைத்த அனுபவம், மற்றும் ஜப்பான் நாட்டின் டெக்னாலஜி உதவியால் இந்தியா வென்றது.
ராக்கெட் சக்திக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் உதவி, மற்ற artificial intelligence எல்லாம் இந்திய மூளை. நம்மாலே தனியா சாதிக்க முடியாதா. இங்கே தான் ITER வருகிறது. ஐ.டி.இ.ஆர் என்பது செயற்கை சூரியனை உருவாக்கும் PROJECT !
இது பிரான்ஸ் நாட்டில் உருவாகிறது. இதில் சப்தமில்லாமல் இந்தியாவும் பங்கேற்று, பணி புரிகிறது. இப்படி ஒரு நாட்டுடன் மற்ற நாடுகளின் உதவி, தேவையை உபயோகித்து வெற்றி காண்பது, விண்வெளி வாணிபத்தில் ஒரு யுக்தி. முதலில் நிலக்கரி, உலக வாணிபத்தில் முக்கிய பங்கு வகித்தது. பிறகு ஸ்டீல் வந்தது. அதற்கு பின் வந்தது சிலிக்கான். இன்று:- RAREST ELEMENT. இப்ப என்ன தான் முடிவாக சொல்ல வர்றீங்க ? இந்தியா முயன்றால் ஒரு டன் Helium 3 ஐ நிலாவில் சுலபமாக அள்ள முடியும். இந்தியா வல்லரசாகும் தூரம் அதிகமில்லை பாஸ் !
நன்றி:விஞ்ஞானி Dr. T. V . வெங்கடேஸ்வரன்