மீண்டும் சதம் அடித்தது தக்காளி விலை: இல்லத்தரசிகள் கவலை

தேனி மாவட்டத்தில் தரமான முதல்ரக தக்காளி பழத்தின் விலை சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை தொட்டது.

Update: 2022-05-16 03:30 GMT

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு,  ஒரு கிலோ தக்காளி பழத்தின் விலை 150 ரூபாயினை எட்டியது. பின்னர் படிப்படியாக குறைந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்தது. விலை வீழ்ச்சியால் செடியில் பறிக்காமல் விடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் தக்காளி விளைச்சல் வீழ்ச்சி காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தரமான ஒரு கிலோ தக்காளி பழம், தற்போதைய  நிலையில் சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டிலேயே 80 ரூபாயினை கடந்து விட்டது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வைகாசி மாதம் பிறந்து விட்டதால் அத்தனை வகை காய்கறிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனால் சராசரியாக எல்லா காய்கறிகளின் விலைகளும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News