தஞ்சை திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு: மாவட்ட ஆளுநர் ராஜரத்தினம் பங்கேற்பு
தஞ்சையில் திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆளுநர் எம்ஜெஎஃப் சௌமா.ராஜரத்தினம் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.;
அறம் விரும்பு, மனிதம் ஆண்டின் தஞ்சை லயன்ஸ் சங்கத்தின் ஜிடி மண்டலம் 9வின் திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு ரீணா மித்ரா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எம்ஜெஎஃப் ஜி. தியாகராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆளுநர் லயன்ஸ் எம்ஜெஎஃப் சௌமா. ராஜரத்தினம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் சிறப்புரை ஆற்றினார். பிஎம்ஜெ எஃப் சேதுக் குமார், எம்ஜெஎப் சேது சுப்ரமணியன், எம்ஜெஎஃப். சமுத்திரம், வி.கணேசன், எம்ஜெஎஃப் எஸ்கேடி எம் கருப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் மண்டல தலைவர்கள் புள்ளம்பாடி டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, பொன்னமராவதி விஜயரங்கன், திருச்சி மாநகராட்சி எஸ்பி மணி, கே.கே.நகர் சோமசுந்தரம், பெரம்பலூர் இன்ஜினியர் ராஜாராம், ஜெயங்கொண்டம் சண்முகம், தஞ்சாவூர் முரளி, பாபநாசம் செல்வராஜ், எரவாச்சேரி, செல்வகுமார், மயிலாடுதுறை சதீஸ், திருவாரூர் தட்சிணா மூர்த்தி, மயிலாடுதுறை மதி, நாகப்பட்டினம் சையத் பக்ருதீன், குத்தாலம் ராஜா குமார், திருச்சி பாபு ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை ஜிடி மண்டலம் 9வின் திருக்குறள் மண்டல மாநாடு தலைவர் தியாகராஜனுக்கு பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தனர்.
முன்னதாக திருவள்ளுவர் வேடம் அணிந்த சிறுவன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மாலை மரியாதையுடன் பேண்ட் இசை முழங்க மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.பள்ளி மாணவர்களின் இசை யோக நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை ஜிடி மண்டலம் 9வின் திருக்குறள் மண்டலத்தை சேர்ந்த, லயன்ஸ் சங்கள் அணி வகுப்பு மரியாதையுடன் வந்து மாநாட்டு தலைவர் தியாகராஜனுக்கு மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க புரவலர்கள் பிஎம்ஜெஎஃப் ராஜகோபால், கண்ணன், லயன்ஸ் வட்டார தலைவர்கள் வெங்கடேசன், அப்துல் ஹக்கீம், சௌரி, கேவிதரன், லயன்ஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், கென்னடி, ராமமூர்த்தி, ராஜா, வீரசிவராமன், ராமகிருஷ்ணன், மதிவாணன்,
ஆலோசகர்கள் பிஎம்ஜெஎஃப் முகமது ரபி, எம்ஜெஎஃப் பிரேம், செயலாண்மை குழு மீனாட்சி சுந்தரம், சேவியர், ராமகிருஷ்ணன், லயன்ஸ் துணைத் தலைவர்கள் தினகரன், சூர்யாகரன், துணைச் செயலாளர்கள் ராமநாதன், செந்தில்குமார், இணைப் பொருளாளர்கள் குழந்தை சாமி, சிவா,
தஞ்சை சோழா லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த தலைவர் பாஸ்கர், செயலாளர் மகேஷ்வரன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் மண்டல மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மாநாட்டு மண்டபம் முழுவதும் திருக்குறள் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.