மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் பசுந்தாள்உரம்: விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் பசுந்தாள்உரம் குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார ஒலய குன்னம் கிராமத்தில் நடைபெற்ற மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் பசுந்தாள்உர பயிர்களின் முக்கியத்துவம் குறித்து உழவர் வயல்வெளிப் பள்ளியில் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனரின் நேரடி பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஒலயகுன்னம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய வயல்வெளி பள்ளி பயிற்சி 25 விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேஷ் மூலம் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களை பற்றியும் அதனை வயலில் இடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு வயல்வெளியில் நேரடியாக பயிற்சி அளித்தார்.
பயிற்சியின் போது அனைத்து விவசாயிகளையும் வயல்வெளியில் பசுந்தாளுரமாக பயிரிடப்படும் பயிர்களையும் பசுந்தாலுரமல்லாத பிற பயிர்களையும் பிடுங்கி வரச் செய்து அதன் வேர்களை உற்று நோக்க செய்தார். பயறு வகை பயிர்களைச் சேர்ந்த பசுந்தால் உரமான கொழுஞ்சி சணப்பு தக்கை பூண்டு போன்றவற்றில் வேர்களில் வேர் முடிச்சுகள் இருப்பதை விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொண்டனர். இவைகளே பயிருக்கு தேவையான தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்து பயிருக்கு இயற்கையாக தழைசத்தை வழங்குகின்றன.
தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸ்களில் தேவையான உணவை வைத்து பள்ளிக்கு அனுப்புவது போல பயறு வகை பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள் பயிருக்கு தேவையான தழைச்சத்து அளிக்கும் டிபன் பாக்ஸாக செயல்பட்டு தேவையான உணவை தேவையான நேரத்தில் அளிக்கின்றன. முக்கியமாக கவனிக்க வேண்டியது பசுந்தாள் உரபயிர்கள் 30 -35 நாட்களில் பூ பூத்து விடும். பூ பூத்த உடன் அவற்றை வயலில் மிதித்து உழுது விட வேண்டும். காய் வைக்கும் வரை பசுந்தாள்உர பயிர்களை வளர்த்தால் வேர் முடிச்சுகளில் உள்ள தழைச்சத்தை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும். இதனால் நாம் மண்ணில் மடக்கி விழும்போது கரிம சத்து மட்டுமே சேரும் தேவையான தழைச்சத்து கிடைக்காது.
விவசாயிகள் கருத்தில் கொண்டு சனப்பு தக்கை பூண்டு கொளுஞ்சி போன்ற எந்த பசுந்தாலும் பெயரை பயன்படுத்தினாலும் 30- 35 நாட்களில் பூ பூத்தவுடன் வயலில் மடக்கி உழுது விட வேண்டும். மஞ்சள் பூக்கள் அதிகம் பூக்கக்கூடிய இந்த பசுந்தால் பயிர்கள் நன்மை செய்யும் பூச்சிகளையும் அதிகமாக ஈர்க்கக் கூடியது. இதனால் வயலின் சூழல் மாறும். இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும். மண்ணில் மடக்கிஉழுவதால் பசுந்தாலும் மக்கி உருவாகும் கரிம அமிலமானது மண்ணின் உப்பு சத்தினை மாற்றக்கூடியது மண்ணில் கரிமசத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் தழைச்சத்தின் அளவை கூட்டுகிறது இதனால் விவசாயிகள் 50 சதவீதம் வரை ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த முடியும். மண்ணின்கட்டமைப்பும் மாற்றப்படுகிறது.
மேலும் மண்ணில் கனிமச் சத்தினைச் சேர்ப்பதற்காக, நமது மதுக்கூர் வட்டார உழவர்கள் பயறுவகைப்பயிர் குடும்பத்தைச்சார்ந்த பயிர்களை வயலில் விதைத்து, அவை நன்கு வளர்ந்தவுடன், பூப்பதற்கு முன், வயலில் நன்கு மடக்கி உழும் பழக்கமும் உள்ளது. விவசாயிகள் நேரடியாக இதனை தெரிந்து கொண்டதால் இனி வரும் காலங்களில் ரசாயன உரங்களினால் ஏற்படும் இயற்கை சூழல் கெடுவதை கருத்தில் கொண்டு பசுந்தால் பயிர்களுக்கும் இயற்கை உரங்களையும் பயன்படுத்துவதென உறுதி எடுத்துக் கொண்டனர்.
பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை ஒலயகுன்னம் முன்னோடி விவசாயி அழகிரி மற்றும் மகளிர் குழு உறுப்பினர் விமலா மற்றும் கீதா ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.