மோகூர் கிராமத்தில் உழவர் வயல் தின விழா

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார மோகூர் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

Update: 2023-06-22 05:34 GMT

மோகூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார மோகூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது. கூட்டத்தில் மோகூர் கிராமத்தை சார்ந்த நூறு விவசாயிகள் கலந்து கொண்டனர் . வேளாண்மை துணை அலுவலர்  அன்புமணி வரவேற்புரை வழங்கினார் .

கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி  அறிவுரையின்படி தேவையற்ற மின் பயன்பாட்டினை தவிர்த்திடுமாறும் , தொடர்ந்து ஒரே பயிர் சாகுபடி செய்யும் முறைகளைத் தவிர்த்து நெல்லுக்குப் பின் உளுந்து , எண்ணெய் வித்து பயிர்கள், சிறு தானிய பயிர்கள் ஆகியவற்றினை மாற்றி மாற்றி சாகுபடி செய்வதனால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

தண்ணீர் பயன்பாட்டினை மேம்படுத்தும் விதமாக தற்சமயம் அரசால் வழங்கப்படும் சிறு விவசாயிக்கான 100 சத மானியம் மற்றும் பெரிய விவசாயிக்கான 75% மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் உள்ள நன்மைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை அலுவலர் இளங்கோவன் கேட்டுக்கொண்டார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பேராவூரணி துறைசெல்வம்  பேசுகையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்து சாகுபடி தொழில்நுட்பத்தினையும் எடுத்துக் கூறினார். அவர்களது உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள உலர் கூடாரம் அமைத்தல் மற்றும் அதன் மூலம் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து அவர் தெரிவித்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா பேசுகையில், தென்னைக்கு உரமிடுதல் மற்றும் பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் தேவைக்கேற்ப உர பயன்பாட்டினை பயன்படுத்துமாறும் மண்வள அட்டையில் அடிப்படையில் உரத்தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உழவர் வயல் தின விழாவில் நெல் மதிப்பு கூட்டு பொருள்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய வகைகள் மேலும் உயிர் உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பயிற்சி நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜூ  மற்றும் அய்யாமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News