மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், இடுபொருட்கள் வழங்கல்

மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.

Update: 2022-03-03 06:06 GMT

தஞ்சை மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அண்டமி நெம்மேலி பாவாஜி கோட்டை, ஓலயகுன்னம், கன்னியாகுறிச்சி, புளியங்குடி மற்றும் வேப்பங்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேளாண் துறையின் மூலம் ரூ.5,000 மானியத்தில் இடுபொருட்களும், தோட்டக்கலைத் துறையின் மூலம் ரூ.660 மானியத்தில் பலா, எலுமிச்சை, கொய்யா போன்ற பழக் கன்றுகளும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி ஒருங்கிணைப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட ஒரு கறவை மாடு மற்றும் 10 ஆடுகளுக்கு தேவையான கோ 29 புல் விதைகள் இரண்டரை கிலோவும் வேலிமசால் விதைகள் தலா ஒரு கிலோவும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான பசுந்தீவனங்களை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் நாமக்கல் கேவிகே-விலிருந்து பெற்று வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு பசுமை பரவலாக்க திட்டத்தின் மூலம் இத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் தலா 20 தேக்கு கன்றுகளும் வேளாண் அலுவலர் சாந்தி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு கார்த்திக் சுரேஷ் மற்றும் தினேஷ் மதுக்கூர் கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோரால் வழங்கப்பட்டது .

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணிராஜ் ஆகியோர் செய்திருந்தனர். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு மேலும் 2 தேனீ பெட்டிகள் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் விதைகளும் உள்ளிட்ட மொத்தம் மானியம் தலா ரூ.45 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News