மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு வழங்கல்
மதுக்கூர் வட்டார வயல்வெளிப் பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் கிட் வழங்கப்பட்டது.;
விவசாயி ஒருவருக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் கிட் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புலவஞ்சி, மஹாதேவபுரம், புளியங்குடி, மதுரபாஷினிபுரம், பெரியகோட்டை, கீழக்குறிச்சி, நெம்மேலி, ஓலயகுன்னம், அண்டமி மற்றும் காடந்தங்குடி பகுதியை சேர்ந்த 30 விவசாயிகள் வீதம் 6 வகுப்புகள் நெல் வயல்வெளிப் பள்ளி கள அளவில் நேரடியாக வேளாண் துறை அலுவலர்கள் மூலமும் முன்னோடி விவசாயிகள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடும் வயல்வெளி கிட்டும் வழங்கப்பட்டது. அண்டமி காடந்தங்குடி கிராமங்களில் வேளாண்மை அலுவலர் சாந்தி, வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன், நெம்மேலி, ஓலயகுன்னம், கீழக்குறிச்சி கிராமங்களில் வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு, மஹாதேவபுரம் கிராமத்தில் வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் புளியங்குடி கிராமத்தில் வேளாண் துணை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது.
மதுரபாஷினி புரம் மற்றும் புலவஞ்சி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி கலந்துகொண்டு விவசாயிகள் களத்தில் பெற்ற பயிற்சியை வருங்காலங்களில் தங்கள் வயல் வெளியிலும் செயல்படுத்தி தேவையற்ற செலவினங்களை குறைத்து தற்சார்புடன் இருந்திட கேட்டுக்கொண்டார்.