மோகூர் ஊராட்சியில் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கல்
மோகூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
மோகூர் பஞ்சாயத்தை சேர்ந்த 250 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 500 தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் அய்யாவு வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த மோகூர் பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 விவசாய குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டன. கலைஞர் திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாய குடும்பங்கள் தென்னங்கன்றுகள் நடவு செய்து ஐந்து வருட காலத்தில் வருமான வாய்ப்பு கொடுக்கும் என்ற நோக்கில் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மோகூர் பஞ்சாயத்தில் மோகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா அய்யாவு தலைமையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் துணை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள மானிய திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளை தேர்வு செய்தனர்.
வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் ஐயா மணி ராஜு ஆகியோர் உழவன் திட்ட போர்டலில் விவசாயிகளின் அடிப்படை விபரங்களை பதிவு செய்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.