மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் வேளாண் சிறப்பு பறக்கும் படை ஆய்வு

Iyarkai Uram in Tamil - மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் மாவட்ட அளவிலான வேளாண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு பறக்கும் படை ஆய்வு மேற்கொண்டது.

Update: 2022-08-27 05:24 GMT

மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு பறக்கும் படை.

Iyarkai Uram in Tamil -தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தேவைக்காக பத்து தனியார் உரக்கடைகளுக்கும் பத்து கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கும் உர விற்பனை உரிமம் வழங்கப்பட்டு தேவையான அளவு உரம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சம்பா சாகுபடி முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா வாங்கும் போது உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பதோ அல்லது பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல் போன்றவை குறித்து விவசாயிகளிடம் மாவட்ட அளவில் புகார்கள் வந்தது.

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களை திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையை அனுப்பிட வேளாண் இணை இயக்குனர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அனைத்து விற்பனை நிலையங்களிலும் உர விற்பனையில் மீறதல்கள் இருக்கின்றனவா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தேவைக்கு உரங்கள் வைக்கப்பட்டுள்ளதா, அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உர கடத்தல் பதுக்கல் மற்றும் விவசாயத்திற்கான யூரியா உரம் பிற தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றனவா போன்ற உரக்க்கட்டுப்பாட்டு ஆணை 1985 க்கு புறம்பான செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

இந்த ஆய்வின்பொழுது விற்பனை முனைய கருவி பழுதான நிலையில் உர விற்பனை மேற்கொண்ட இரண்டு கூட்டுறவு உர விற்பனையகங்கள் மற்றும் ஒரு தனியார் விற்பனை நிலையத்தின் மீது எச்சரிக்கை தபால் வழங்கப்பட்டது . மேலும் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளின் எடை சரியாக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது .

மேலும் காலாவதியான உரங்கள் மற்றும் உர மூட்டைகள் தற்போதைய உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அட்மா திட்ட அலுவலர் ராஜு ஆகியோர் உடனிருந்தனர் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News