வாட்ஸ் அப் செய்தி பார்த்து குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இன்னிக்கி குற்றாலத்தில் குளிக்க அனுமதி என்று வாட்ஸ் அப்பில் வலம் வந்த (போன வருஷத்து டிவி நியூஸ்) தகவலை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்துட்டாங்க.
இன்னிக்கி குற்றாலத்தில் குளிக்க அனுமதி என்று வாட்ஸ் அப்பில் வலம் வந்த (போன வருஷத்து டிவி நியூஸ்) தகவலை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்துட்டாங்க..
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மிதமான சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக அதிகரித்துள்ளது.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்த அளவில் விழுகிறது. ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனா கொஞ்சமா விழுற தண்ணில குளிக்க அனுமதி இல்லேங்கிறதால வந்ததுக்கு ஒரு அடையாளம்ன்னு செல்லுல படம் எடுத்துட்டு ஏமாற்றத்தோட திரும்பிட்டாங்க..