கந்துவட்டி கடன்: சங்கரன்கோவிலில் இளம்பெண் தற்கொலை முயற்சி
சங்கரன்கோவிலில், இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடைத்தெருவில் வசித்து வருபவர், மாரியப்பனின் மனைவி முத்துலெட்சுமி, வயது 35, இவர், திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துலெட்சுமி தற்கொலைக்கு முயன்றதற்கு, கந்துவட்டிக்கு கடன் கட்ட முடியாமல் போனதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து, சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.