முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு தீவிரம்: வைரலாகும் ஆடியோ
முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி டி.எஸ்.பி பேசியா ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து முக கவசம் அணியாத நபர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதில் கடந்த இரண்டு நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேலாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னிவளவன் வாக்கி டாக்கியில் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் முக கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்கள் என அதிக வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் வணிக வளாகங்களில் போலீசார் தாக்கிய செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் அதிக வழக்குகள் பதிய வேண்டும் என காவலர்களுக்கு டார்கெட் கொடுத்து பேசியதாக வெளிவந்த ஆடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.