தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள் உற்சாகம்!
61 நாட்களாக நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு வங்கக்கடலில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் 20 குதிரை திறனுக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்கள் மட்டும் வழக்கம்போல் கடலுக்கு சென்றுமீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு அரசின் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று (14ம் தேதி) நள்ளிரவு முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் மீனவ மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக கடலுக்கு செல்லும் ஆயத்தமாக மீனவர்கள், தங்கள் படகுகள், வலைகளை தயார்படுத்தியுள்னர். அவர்கள் நாளை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.