தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17ம் தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக டெல்லிக்கு வருகிற 17ம் தேதி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.;
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் இதனை தடுக்கும் பணியில் அரசு முழு வீச்சில் செயல்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இந்தநிலையில் தமிக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின், முதன் முறையாக வரகிற 17ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்க உள்ளார்.
அதில்,கொரோனா தொற்றை தடுக்க கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தப்படுகிறது. செங்கல்பட்ட மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தை இயக்க வலியுறுத்தப்படுகிறது.
மேலும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை வழங்கவும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்க வலியுறுத்துதல், நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.