சாலை விபத்து: ஹெல்மெட் அணியாததால் இளைஞர் பலி

ஹெல்மெட் அணியாததால் விபத்தில் இளைஞர் பலியானார்.

Update: 2021-03-26 13:07 GMT

சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த வெள்ளிமலை என்பவரின் மகன் 21 வயதான ராதாகிருஷ்ணன். அவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை ராதாகிருஷ்ணன் மருதிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே இருந்த ஆலமரத்தில் மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராதாகிருஷ்ணன் பலியானார்.

எஸ்வி.மங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News