60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் அகற்றப்படுமா

பள்ளி சுற்றுச் சுவர் முழுவதிலும் முற்றிலுமாக விரிசல் விழுந்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்து வருகிறது

Update: 2021-12-19 06:21 GMT

வாராப்பூர் ஊராட்சியில் விபத்துக்காக காத்திருக்கும் 60 ஆண்டு பழமை வாய்ந்த ஓட்டுக்கட்டிடம் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்னதாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி யானது சுமார் 60 வருடத்திற்கு முன்னதாக கட்டப்பட்ட ஓட்டு கட்டிடம் கொண்ட பள்ளியாகும். இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் பள்ளி வளாகத்தில் உள்ள இரு ஓட்டு கட்டிடங்களில் ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் பள்ளியில் கல்வி பயின்று வந்த மாணவ மாணவிகள் சுழற்சி முறையிலும் கல்வி பயின்று வந்த நிலையில் தற்சமயம் பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு ஓட்டு கட்டிட சுவற்றின் பல்வேறு பகுதிகளில் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து இப்பகுதியிலுள்ள சிவசுப்பிரமணியன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் கூறுகையில் இப்பள்ளி கட்டிடம் ஆனது சுமார் 60 வருடத்திற்கு முன்பதாக ஊர்மக்கள் ஒன்றுகூடி கட்டப்பட்ட ஓட்டு கட்டிட பள்ளியாகும். ஆனால் இப்பள்ளி தற்சமயம் கடந்த மாதத்தில் தொடர் மழையினால் வளாகத்தில் உள்ள இரண்டு ஓட்டுக் கட்டிடத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடம் இரவு நேரத்தில் விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாததால் நாங்கள் நிம்மதி அடைந்தோம். தற்போது மீதமுள்ள இந்த ஓட்டு பள்ளியும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட காரணத்தினால், பள்ளி சுற்றுச் சுவர் முழுவதிலும் முற்றிலுமாக விரிசல் விழுந்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியதோடு இவ்வூரில் வசித்து வரும் கிராம மக்கள் இடிந்து விழுகும் தருவாயில் உள்ள கட்டிடத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்ப மறுத்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து புதிய கட்டடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி வருகிறோம் என்று கூறினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் விபத்துகள் ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப் பள்ளியில்  கல்வி கற்ற முன்னாள் மாணவர்களின் கோரிக்கையும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News