திருப்புத்தூர் திமுக வேட்பாளரை ஆதரித்து மாற்றுத்திறனாளிகள் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனைஆதரித்து மாற்றுத்திறனாளிகள் வாக்கு சேகரிப்பு.;

Update: 2021-04-03 11:43 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனைஆதரித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பாக தவழும் மாற்றுதிறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் புஸ்பராஜ் தலைமையில் சிவகங்கை நகர துணைசெயலாளர் வீனஸ்ராமநாதன் ஏற்பாட்டில் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த ஊரான அரளிகோட்டையில் வாக்கு கேட்டு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் பிரச்சார பயணத்தை மாற்றுதிறனாளிகள் துவக்கினர்.

திருக்கோஸ்டியுர், பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் உள்ளிட்ட பலகிராமங்களுக்கும் சென்று வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியிலும் உள்ள வீடுகளிலும் அங்குள்ள கடைகளில் உள்ள வர்த்தகர்களையும். வாக்களர்களையும் சந்தித்தும் துண்டுபிரசுரங்களை வழங்கியும் ஆதரவு திரட்டினார்கள். இந்நிகழ்ச்சியில்ஆண்,பெண் மாற்றுதிறனாளிகளும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News