17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேர் கைது

திருப்பத்தூர் அருகே 17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-11-05 05:00 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மயில்களுடன் போலீசார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி வனப்பகுதிகளில் மயில்கள் வேட்டையாடப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற திருப்பத்தூர் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய இருவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்த சாக்கு பைகளை சோதனை செய்த போது அந்த சாக்கு பைக்குள் வேட்டையாடி இறகுகளை நீக்கிய மயில்கள் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்த அவர்கள் இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர். பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ராஜா (35 ) மற்றும் தியாகராஜன் (32 ) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 17 மயில்களை கைப்பற்றினர். மேலும் தீபாவளி விற்பனைக்காக மயில்களை வேட்டையாடியதாக தெரியவந்தது. பின்பு இருவரையும் கைது செய்த வனத்துறையினர் இருவர் மட்டும் வேட்டையாடினார்களா? அல்லது வேறு யாரும் உள்ளனரா எனவும், அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த தீவிர விசாரணை செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News