சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு சேகரிப்பில் தேசிய கட்சிகள், சுயேட்சை கட்சிகள் என களமிறங்கி தீவிரமாக அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவன் திருப்பத்தூர் நகரில் உள்ள புதுப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அங்கு பேசிய உமாதேவன் பணமா, பாசமா என்று வரும்போது பாசத்திற்கு தான் நாங்கள் கட்டுப்படுவோம் என்று வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே புதுப்பட்டி பகுதிக்கு நான் எம்எல்ஏவாக இருக்கும்போது குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்த சிறப்பு எனக்கு உண்டு என்றும் கூறினார். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் சேர்மன் சோமசுந்தரம், நகர செயலாளர் அப்துர் ரஹீம் மற்றும் அமமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.