திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக பெருவிழா
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா. தங்க அனுமந்த வாகனத்தில் வீதி உலா.;
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா. தங்க அனுமந்த வாகனத்தில் சௌமிய நாராயண பெருமாள் பவனி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருகோவிலில் மாசி மக பெருவிழா முன்னிட்டு மூன்றாம் நாளான இன்று ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் தங்க ஹனுமந்த வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் மூன்றாம் திருநாளில் உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் தங்க ஆபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்தில் தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் வாணவெடிகள் உடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமந்த வாகனத்தில் பவனி வந்த சௌமிய நாராயணப் பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர் .