கன்றுக்குட்டியை சுமந்து சென்ற காரை 2 கிமீ பின்தொடர்ந்து சென்ற தாய்ப்பசு
கன்றுக்குட்டியை காரில் கொண்டு சென்றதால் 2 கி.மீ. தூரம் தாய்ப்பசு பின்னால் ஓடிய காட்சி பார்த்தவர்களை நெகிழ வைத்தது;
கன்றுக்குட்டியை காரில் கொண்டு சென்றதால் 2 கி.மீ. தூரம் தாய்ப்பசு பின்னால் ஓடிய காட்சி நெகிழ வைத்தது .
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசு கருவுற்று இருந்தது . அந்த பசு மாட்டை மேய்ச்சலுக்காக பொன்னான்குடி பகுதியில் உள்ள வயல்வெளியில் விட்டு இருந்தனர் . அப்போது , அந்த பசு மாடு அங்கேயே அழகிய காளை கன்றை ஈன்றது .
இதைய டுத்து அந்த பசுமாட்டையும் , கன்றையும் ஒரு நாள் முழுவதும் அங்கேயே வைத்து பராமரித்தனர். அடுத்த நாள் மாலையில் , அங்கிருந்து தங்களது வீட்டில் உள்ள தொழுவத்திற்கு பசு மற்றும் கன்றுக்குட்டியை கொண்டு வர முயற்சி செய்தனர் . ஆனால், கன்று குட்டி யால் நடக்க முடியவில்லை . இதையடுத்து கார் ஒன்றின் பின்பகுதியில் கன்றுக்குட்டியை தூக்கி வைத்து அங்கிருந்து புறப்பட்டனர் .
இதை பார்த்த அந்த பசு தனது கன்றுக்குட்டியை வேறு எங்கேயோ கொண்டு செல்கின்றனர் என கருதி அந்த காரின் பின்னால் ஓட தொடங்கியது . சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கன்றுக்குட்டிக்காக காரின் பின்னால் பசு ஓடியது . தனது எஜமானர் வீட்டுக்குத்தான் கன்றுக்குட்டியை கொண்டு செல்கிறார்கள் என்பதை அறியாமல் வீடு வரை அந்த பசு பின்தொடர்ந்து ஓடிவந்தது .
பின்னர் கன்றுக்குட்டியை காரில் இருந்து இறக்கியதும் தாய்ப்பாசத்துடன் அரவணைத்தது . மனிதர்களில் சிலர் , குழந்தைகளை கைவிடும் இந்த காலத்தில் 5 அறிவு உள்ள பசு மாடு , தனது கன்றை பிரித்துவிடுவார்களோ என நினைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காரை பின் தொடர்ந்து ஓடிய காட்சி நெகிழ வைத்துள்ளது . தாய்ப்பாசத்துக்கு இணை எதுவுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வாக, இந்த நிகழ்சி திகழ்கின்றது என்றார் அது மி.