மூடப்பட்டிருந்த தலைவர்களின் சிலைகள் திறப்பு!
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூடப்பட்டிருந்த தலைவர்களின் சிலைகள் திறப்பு! அதிகாரிகள் நடவடிக்கை!!
தமிழகத்தில் நடந்து முடிந்த 16 வது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவின்படி அரசியல் தலைவர்களின் சிலைகளை அதிகாரிகள் துணிகளை கொண்டு சுற்றி மறைத்து வைத்தனர். தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பதவி ஏற்கப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் துணிகளைக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் சிலைகளை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அண்ணா சிலையை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சிலைகளின் மேல் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகளை அகற்றி நீர் ஊற்றி கழுவி விட்டனர்.