சிலம்பக்கலைக்கு அரசு அங்கீகாரம்: கிராமங்களில் வேகமாகப் பரவிவருகிறது

சிலம்பக்கலை பயிற்சி மையங்கள் தமிழகம் முழுவதும் படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்

Update: 2022-01-11 03:30 GMT

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

பாரம்பரிய கலையான சிலம்பக் கலைக்கு   காக்க தமிழக அரசுஅங்கீகாரம் கொடுத்ததால் தற்போது சிலம்பக்கலை பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவ தொடங்கியுள்ளது  என்றார் திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்.

திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் சிலம்ப பயிற்சி பள்ளியை தொடக்கிவைத்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் மேலும், கூறியதாவது: அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு துறைக்கு கொடுக்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததுடன் சிலம்பக்கலையையும் முதல்வர் மு..க.ஸ்டாலின் இணைத்து தமிழ் கலாசாரத்தை காத்துள்ளார். சமதர்ம, சமுதாயத்தை ஊக்குவிப்பதற்கு சிலம்பக்கலை விளையாட்டு ஒரு முக்கிய அம்சமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். சிலம்பக்கலையில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். சிலம்பக்கலை மட்டுமல்லாமல் மற்ற தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கும், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து படிப்படியாக முதலமைச்சர் அங்கீகாரம் வழங்குவார், சிலம்பக்கலை பயிற்சி மையங்கள் தமிழகம் முழுவதும் படிப்படியாக கொண்டுவரப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.


Tags:    

Similar News