சோழம்பட்டியில் அமைக்கப்பட்ட புதியதார் சாலையை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆய்வு
சோழம் பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் தரம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆ தெக்கூர் அருகே உள்ளது சோழம்பட்டி கிராமம்.. இங்கிருந்து செல்லும் சாலை பொன்னமராவதி - திருப்பத்தூர், திண்டுக்கல் - காரைக்குடி ஆகிய இரு நெடுஞ்சாலையையும் இணைக்கும் பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது. இச்சாலை மிகவும் மோசமாக இருந்து வந்ததால் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்..
இதையடுத்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை போடுவதற்காக 3 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்சமயம் 9 பாலங்களுடன் கூடிய தார் சாலை பணி நிறைவடைந்தது. புதிதாகப் போடப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பெரியசாமி, உதவி பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் உதவியாளர்கள் உடனிருந்தனர்.