திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்

Update: 2022-01-13 04:48 GMT

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது சிராவயல் கிராமம். ஆண்டுதோறும் தைப்பொங்கல் இரண்டாம் நாள் இக்கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். வரும் 17ம் தேதி இங்கு நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது.  போட்டியை காண, இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடும் நிலையில், கொரான தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மஞ்சுவிரட்டு நடக்க இருக்கும் மைதானத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Tags:    

Similar News