மருது சகோதரர்கள் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மரியாதை

மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அரசு சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மது சூதன் ரெட்டி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2021-10-24 07:12 GMT

மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செய்த சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசிய கொடி ஏற்றினார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாமன்னர்கள் சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் ஆங்கிலேயர்களால் திருப்பத்தூரில் 1801 ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.

இதனையடுத்து இன்று திருப்பத்தூரில் உள்ள மணி மண்டபத்தில் 220 வது நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பின் பெரிய மருது, சின்ன மருது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் அவரது வாரிசுகள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.விழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 1200 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News