தடையை மீறி மஞ்சுவிரட்டு போட்டி: 100 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

மல்லாக்கோட்டையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தடையை மீறி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டி 10 பேர் காயமைடந்தனர்.

Update: 2022-01-16 03:10 GMT

மல்லாக்கோட்டையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமான முறையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

கொரானா கட்டுப்பாட்டினை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் பாரம்பரிய முறையில் அம்பலத்தார் சசி பாண்டித்துரையைமேளதாளங்கள் முழங்க ஊரைச்சுற்றி அழைத்து வந்துஸ்ரீசக்தி வீரன் கோயில் எதிரே உள்ள மந்தையில் கோயில் காளை கட்ட வைத்துவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள தொழுவங்களில் மஞ்சள் குங்குமம் திலகமிட்டு, கழுத்தில் துண்டுகள் மற்றும் மாலையிட்டு அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு அனுமதியை மீறி பாரம்பரியமான முறையில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News