தடுப்பூசி முகாமில் பல்லி விழுந்த உணவு- 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் அருகே, தடுப்பூசி முகாமில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மூன்று பேர் வாந்தி , மயக்கத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2021-11-15 00:30 GMT

பல்லி இறந்து கிடந்த உணவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில்,  செளமிய நாராயணபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்  நேற்று நடைபெற்றது. அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் செவிலியர்கள் என,5 பேருக்கு காலை உணவு தனியார் உணவகத்தில் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உணவை முதலில் மூன்று பேர் சாப்பிட்டுள்ளனர் . செவிலியர் ஒருவர் சாப்பிடும் போது உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், கூச்சலிட்டார்,  சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற இருவரையும் தடுத்துள்ளார். இருப்பினும் உணவு சாப்பிட்ட உதவி மருத்துவ செவிலியர் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், கூட்டுறவு துறை அலுவலர் குழந்தை ஆகியோருக்கு வாந்தி மயக்கம் வந்தது.

இதை அடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த எழுந்த புகாரின் பேரில்,திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள, சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சமைக்கப்பட்ட உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.

Tags:    

Similar News