விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க அரசு திட்டம் வனத்துறை அதிகாரி தகவல்

10 ஹெக்டேருக்கு அதிகமாக உள்ள பெரு விவசாயிகளும், நடுத்தர சிறு குறு விவசாயிகளும் இந்த பயன்படுத்திக் கொள்ளலாம்;

Update: 2021-07-25 12:25 GMT

சிங்கம்புணரி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளுடன் நடவுசெய்து கொடுக்க அரசு திட்டம்: வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர் 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டத்தில், வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு, இலவச மரக்கன்றுகளுடன் நடவு செய்து கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. நாற்றுகளின் விருப்பம் மற்றும் தேவையான தேக்கு, ஈட்டி, செம்மரம், சந்தனம், வேங்கை, தீக்குச்சி மரம், முந்திரி, கடம்பு, பலா, சவுக்கு, சில்வர் ஓக், மலைவேம்பு, புளி, மகாகனி, நாவல், தான்றிக்காய், கடுக்காய், சந்தனவேம்பு ஆகிய 18 வகையான மரக்கன்றுகளை வனத்துறை மூலம் நடவு செய்ய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு மரக்கன்றுகள் இலவசமாக நடவுசெய்து தரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஹெக்டேருக்கு அதிகமாக உள்ள பெரு விவசாயிகளும், நடுத்தர சிறு குறு விளிம்பு நிலை விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் சுப்ரமணியன் 9442419680, கருப்பையா- 9786431805    ஆகிய வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

  

Tags:    

Similar News