பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க ஜி. கே வாசன் கோரிக்கை

விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஜி. கே வாசன் கூறினார்

Update: 2021-11-12 06:30 GMT

தமாக  தலைவர் ஜிகே வாசன்

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் , வெள்ள அச்சத்தில் இருக்கும் தமிழக மக்களின் துயரை போக்க தமிழக அரசு துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

டெல்டா மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல செய்தி என்றவர், வெள்ள சேதத்தை பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அரசியலில் ஏற்புடையதுதான் என்றும், அதைத்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஷயத்திலும் நடந்துள்ளதாகவும் கூறினார்.

சென்னை மாநகராட்சி குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்வி நியாயமானது என்றும், மக்களுக்கு வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பு ஏற்படும் பொழுது,அரசும், மாநகராட்சிகளும் தங்களுடைய கடமையை மறக்காமல் சரிவர செய்ய வேண்டும் கூறிய அவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கி ,தங்களது உரிமையை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News