இளவட்ட மஞ்சுவிரட்டு : மாடுகள் முட்டியதில் 50 க்கும் மேற்பட்டோர் காயம்

மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு மாடு பிடிப்பதற்காக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்

Update: 2022-01-08 05:00 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டு நிகழ்வில்  மாடுகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி கிராமத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக இன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இப்பகுதியில் முதல்  நடைபெறும் முதல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  சிவகங்கை, மதுரை,, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக பாரம்பரிய முறைப்படி கூட்டு வண்டியில் ஊர் அம்பலகாரர்கள் ஊர்வலமாக வந்து,  மஞ்சு விரட்டு நிகழ்வில் பங்கேற்க  வந்திருந்த காளைகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் மரியாதை செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஜல்லி்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக் அவிழ்த்து விடப்பட்டன. ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு மாடு பிடிப்பதற்காக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். இந்த மஞ்சுவிரட்டில் 50க்கும் மேற்பட்டவர்கள் மாடுகள் முட்டியதால் காயமடைந்தனர். அதில் ஐந்து பேர் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர் நபிஷா பானு தலைமையிலான மருத்துவர் குழு விபத்தில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து வைத்தனர் மஞ்சுவிரட்டு ஏற்பாடுகளை எம்.சூரக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்

Tags:    

Similar News